Published : 15,Dec 2017 05:04 AM

சனிப்பெயர்ச்சி விழா: திருநள்ளாரில் புதுவை முதல்வர் ஆய்வு

Puduchery-CM-inspect-Thirunallar

திருநள்ளார் சனி பெயர்ச்சி திருவிழாவை முன்னிட்டு முதல்வர் நாராயணசாமி அங்கு ஆய்வு செய்தார்.

வரும் 19-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இதற்காக சனிபகவானுக்கு கோயில்களில் சிறப்பு விழா நடைபெறுகிறது. இந்நிலையில் புகழ்பெற்ற திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் வரும் 19 ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. 

இதனையொட்டி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆகம விதிப்படி சாமி தரிசனம் செய்ய, முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை முதல்வர் நாராயணசாமி ஆய்வு செய்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்