[X] Close

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

Parliament---s-winter-session--starts-today

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இத்தொடர் அர்த்தமுள்ளதக நடக்க அனைத்துக்கட்சியினரின் ஆதரவை பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.


Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, ஜனவரி 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் 14 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகள், ஜி.எஸ்.டியை அமல்படுத்தியதில் ஏற்பட்ட குறைபாடு, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம் உள்ளிட்டவை இந்த தொடரில் பரபரப்பாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. 


Advertisement

இந்நிலையில் இத்தொடரை அமைதியாக நடத்துவது தொடர்பாக நேற்றிரவு அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய அவர், கூட்டத்தொடரை அர்த்தமுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியல் பாகுபாடுகளைக் கடந்து அனைத்து கட்சிகளும் கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close