[X] Close

ஈபிஎஸ்-ஓபிஎஸை அவதூறாய் பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது

TTV-Dinakaran-Supporter-arrested-for-talk-about-EPS-OPS

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் டிடிவி தினகரன் ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


Advertisement

இரட்டை இலை சின்னத்தை பெறும் விவகாரம் முதல், அதிமுகவின் அனைத்து அரசியல் நிகழ்வுகளில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. அத்துடன் பேனர்கள் வைப்பது, கட்சியினரை ஈர்ப்பது உள்ளிட்ட பிரச்னைகளும் அதிமுகவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது நடைபெறும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுவதால், தமிழகம் முழுவதும் உள்ள தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவினர் இடையே அரசியல் மோதல் என்பது சமூக வலைத்தளங்கள் மோதலாகவும் உருவெடுத்துள்ளது

இந்நிலையில் தேனி மாவட்டம் வாலிப்பாறை கிராமத்தைச் சேர்ந்த கர்ணன் என்பவர், முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன்பேரில் கர்ணனை கைது செய்த காவல்துறையினர், அவரை ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதை விசாரித்த நீதிமன்றம், கர்ணனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது.
 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close