[X] Close

ரஜினி அரசியலுக்கு வருவதை அறிவிப்பார்: தமிழருவி மணியன் உறுதி

Tamizharuvi-Maniyan-Said-about-Rajinikanth-and-Kamal-Hassan

5 நாட்கள் ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த், தனது அரசியல் வருகையை உறுதி செய்வார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய தமிழருவி மணியன், “26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை என 5 நாட்கள் ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த், நிச்சயமாக தனது அரசியல் வருகையை உறுதி செய்வார். 20 வருடமாக ரஜினிகாந்த் வருவாரா? மாட்டாரா? என பட்டிமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கு விடை கூறும் விதமாக இந்த ரசிகர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. எனவே நிச்சயமாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை அறிவிப்பார். ரஜினி அரசியலுக்கு வருவார் என்பது நான் அறிந்த செய்தி, ஆனால் அதை அவர் தான் ஊடகங்களில் உறுதி செய்யவேண்டும். எனக்கு தெரிந்த உண்மையை நான் கூறுகிறேன்”என்றார்.

மேலும் “ரஜினியுடன் இணைந்து செயல்படுவதா இல்லை தனித்து செயல்படுவதா என்பதை கமல்ஹாசன்தான் முடிவுசெய்ய வேண்டும். கமல்ஹாசன் அரசியலில் மூன்று முடிவெடுகளை எடுக்காலம். ஒன்று ரஜினியுடன் கைகோர்த்து அரசியலில் ஈடுபடலாம். அவ்வாறு செய்தால் அவருக்கும் வெற்றி கிடைக்கும். இரண்டாவது திமுகவுடன் இணையலாம். அவ்வாறு செய்தால் அவர் தமிழகத்தின் அரசியல் சிஸ்டம் குறித்து பேசும் தகுதியை இழந்துவிடுவார். மூன்றுவது அவர் தனித்து நிற்காலம். அவ்வாறு செய்தால் அது அவருக்கு சோகமான முடிவாகவும், நடிகர் சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்ட நிலையையும் கொடுக்கும்” என்று கூறினார். 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close