[X] Close

ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் ஆஜரானார் தீபக்

Jayalalithaa-death--Deepak-appeared-before-enquiry-commission

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்  ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆஜராகியுள்ளார். அவரிடம் நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையத்தில் திமுக மருத்துவர் அணியை சேர்ந்த மருத்துவர் சரணவன், ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் உட்பட 27 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தனர். அதனடிப்படையில் சரவணனிடம் நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நீதிபதி விசாரணை நடத்தினார்.

இதனிடையே விசாரணை ஆணையம் முன்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்று ஆஜரானார். அவரிடம் சுமார் மூன்றரை மணி நேரம் நீதிபதி விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில் இன்று விசாரணை ஆணையம் முன் ஜெயலலிதாவின் அண்ணன் மகனும், தீபாவின் சகோதரருமான தீபக் ஆஜராகி உள்ளார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close