Published : 14,Dec 2017 05:38 AM

ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு

Rameswaram-fishermen-were-driven-by-the-Sri-Lankan-Navy

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீன‌வர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகள் தொடர்வதால் நேற்று ராமேஸ்வரத்திலிருந்து 400க்கும் குறைவான படகுகளே மீன்பிடிக்கச் சென்றன. கச்சத்தீவு அருகே இந்திய எல்லையில் இருக்கும் போதே, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 9 படகுகளில் தொடர்ந்து ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு மீனவர்கள் கரை திரும்பும்போது 30க்கும் அதிகமான படகுகளிலிருந்த மீன்பிடி சாதனங்களை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர். இந்திய கடலோர காவல் படை இல்லாததால் இந்திய எல்லைக்குள் நுழைந்து இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்