Published : 13,Dec 2017 08:28 AM

ஜூனியர் பாண்ட்யாவை ரன்னிங்கில் முந்திய சீனியர் தோனி

MS-Dhoni-Beats-Hardik-Pandya-12-Years-His-Junior-In-100Metre-Race

பயிற்சியின் போது மகேந்திர தோனி, இளம் வீரர் பாண்ட்யாவை ஓட்டப்பந்தயத்தில் முந்திய வீடியோ பதிவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

இந்திய அணியில் மிகவும் சீரான உடல் தகுதி கொண்ட வீரர்களில் ஒருவராக முன்னாள் கேப்டன் மகேந்திர தோனியும் திகழ்ந்து வருகிறார். இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியையொட்டி மேற்கொள்ளப்பட்ட பயிற்சியின் போது தனது உடற்தகுதியை தோனி மீண்டும் நிரூபித்துள்ளார்.

பயிற்சியின் போது இளம் வீரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் தோனி இருவரும் 100 மீட்டர் தூரம் ஓட்டப்பந்தயம் மேற்கொண்டனர். இதில் இருவரும் ஒரே வேகத்தில் வேகமாக ஓடினர். இருப்பினும் இறுதியில் பாண்ட்யாவை விட, தோனி வேகமாக ஓடி தூரத்தை முதலில் கடந்தார். பின்னர் இருவரும் சந்தோஷமாக சிரித்து மகிழ்ந்தனர். இருவரும்  ஓடுவதை சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். இந்தப் பயிற்சி வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

      

இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். 24 வயது பாண்ட்யாவால் 36 வயது தோனியை ஓட்டப்பந்தயத்தில் முந்த முடியவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கிரிக்கெட் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

            

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்