சீனாவில் 62 அடுக்கு கட்டடத்தின் மீது பாதுகாப்பின்றி சாகசம் செய்தவர் செல்ஃபி எடுக்கும் போது தவறி விழுந்து பலியானார்.
சீனாவை சேர்ந்த சாகச வீரர் க்ளிம்பர் வூ யாங்கிங். இவர் சீனாவில் பல அடுக்குமாடி கட்டிங்களின் மீது எந்தவித பாதுகாப்பும் இன்றி சாகசம் செய்து செல்பி எடுப்பதை வழக்கமாக கொண்டவர். இதனால் இவருக்கு இளைஞர்கள் மத்தியிலும், இணையதளத்திலும் தனி மவுசு இருந்தது. சமூக வளைத்தளங்களில் மட்டும் இவரை 60,000 பேர் பின்தொடர்கின்றனர். சமீப காலமாக இவர் பணத்திற்காக பந்தயம் கட்டி, உயரமான கட்டிங்கள் மீது சாகசம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் கடந்த மாதம் 8ஆம் தேதி, 15,000 டாலர்களுக்காக மத்திய சீனாவில் உள்ள 62 அடுக்க கட்டிடத்தின் மீது ஏறி சாகசம் செய்துள்ளார். அப்போது செல்ஃபி வீடியோ எடுத்தபடியே சாகசம் செய்த வூ யாங்கிங், கால் தவறியதால் கீழே விழுந்துள்ளார். இந்த வீடியோவை அவர் நேரலையாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்ததால், அங்குள்ள ஊடகங்கள் மூலம் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அத்துடன் அந்த வீடியோவையும் இணையதளங்களில் முடக்கினர். இந்நிலையில் வூ யாங்கிங் உயிரிழந்துவிட்டதாக அவரது காதலி உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக வூ யாங்கிங்-ன் உறவினர் பேசுகையில், வூ யாங்கிங் தனது தாய் மருத்துவத்திற்காகவும், அவருடைய திருமணத்திற்காவும் சாகசங்களை மேற்கொண்டு பணம் சேர்த்து வந்ததாக கூறினார். இந்நிலையில் வூ யாங்கிங் உயிரிழந்த வீடியோ தற்போது சீன வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்