Published : 12,Dec 2017 01:48 PM

ஜல்லிக்கட்டு வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

Jallikattu-case--SC-new-judgement

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய மாணவா் அறப்போராட்டத்தைத் தொடா்ந்து, இந்திய மிருகவதை தடுப்புச் சட்டத்தில் தமிழக அரசு சார்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த சட்டங்களை எதிர்த்து பீட்டா, விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சட்டத்தை மீறும் வகையில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன், ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்க்கும் மனுக்கள் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். அதேசமயம், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். எனவே, ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் இல்லை. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்