Published : 12,Dec 2017 07:42 AM

‘நாளைய முதல்வரே’.. ரஜினி பிறந்தநாள் போஸ்டர்கள் பலவிதம்..!

Rajinikanth-birthday-poster

ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் ஏகப்பட்ட போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், ‘நாளைய முதல்வரே’, ‘மக்கள் போற்றும் மாமனிதரே’ போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 67வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி அவரின் ஏராளமான ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் ரஜினி தனது பிறந்த நாளை கொண்டாடும்போதும், இந்தாண்டு அவர் தனது அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் ஏங்கி தவித்து வருகின்றனர். அதற்கேற்றாற் போல் அவ்வப்போது அரசியல் பேசுவதும், பின் மயான அமைதி காப்பதையும் ரஜினி வழக்கமாக கொண்டுள்ளார். ஆண்டாண்டு காலமாக ரஜினி இந்த மாய வித்தையை மட்டும் பின்பற்றுவதால் அவரது ரசிகர்களும் சற்று விரக்தியடைகின்றனர் என்பது உண்மை.

சமீபத்தில் கூட நாட்டில் சிஸ்டம் சரியில்லை என அதிரடியாக பேசியிருந்தார். இதனால் அவரின் அரசியல் களம் ஆரம்பமாகிவிட்டது என கருதப்பட்ட நிலையில் தற்போதும் அது பொய்த்துள்ளது. திரைத்துறையில் கொடிகட்டி பறந்த நம்மால், அரசியல் உலகை ஆள முடியுமா என்ற சந்தேகம் ரஜினியின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எவ்வாறாயினும், தங்களது தலைவர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என அவரின் ஏராளமான ரசிகர்கள் எண்ணுகின்றனர். இதற்கேற்றாற்போல தமிழகம் முழுவதும் ஏகப்பட்ட போஸ்டர்கள் இன்று ஒட்டப்பட்டுள்ளன. ‘நாளைய முதல்வரே’, ‘மக்கள் போற்றும் மாமனிதரே’, ‘மக்களின் உயிரே’, ‘தமிழகத்தை ஆள பிறந்தவரே’ என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளன. ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவாரஸ்யமான போஸ்டர்கள் உங்கள் பார்வைக்கு..!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்