Published : 23,Feb 2017 12:09 PM
மோடி வருகையை எதிர்ப்பவர்கள் இந்து மத விரோதிகள்: எச்.ராஜா

கோவையில் ஆதியோகி சிலையை திறந்து வைக்க பிரதமர் மோடி வருவதை எதிர்ப்பவர்கள் இந்து மத விரோதிகள் என பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி, எந்த விதத்திலும் மத ரீதியாக யாரையும் பாகுபடுத்தவில்லை என்றார். தனிப்பட்டமுறையில் மோடிக்கு மத நம்பிக்கை இருக்கிறது எனவும் அவருக்கு ஆன்மீகத்தேடல் உள்ளது என்றும் கூறிய எச்.ராஜா, அவர் சிவன் சிலையை திறந்து வைப்பதில் என்ன தவறு என கேள்வி எழுப்பினார். மதமாற்ற சக்திகளின் தூண்டுதலின் பேரில்தான் பிரதமர் ஆதியோகி சிலைத் திறப்புக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார், மேலும் அவருக்கென்று உள்ள மதவிழாவில் கலந்து கொள்ள முழு உரிமை உள்ளது. அதை தட்டிக்கேட்பதற்கு யாருக்கும் எந்த வித உரிமையும் இல்லை எனவும் மோடி வருகையை எதிர்ப்பவர்கள் இந்து மத விரோதிகள் எனவும் எச்.ராஜா கூறினார்.