[X] Close

இந்தியா எங்களுடனும் விளையாடணும்: பாக். கிரிக்கெட் வாரியம் அடம்!

Pak-Cricket-Board-questions-BCCI---s-proposed-Tours-programme

இந்தியா கிரிக்கெட் அணி, எங்களுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம், 2019 -ம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 81 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த அட்டவணையை தயாரித்துள்ளது. இதில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி, எங்களுடன் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்,இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையேயான நேரடி கிரிக்கெட் போட்டி தொடர் குறித்த எங்களது ஒப்பந்தம் இன்னும் முடிவடைந்துவிடவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் தனது போட்டி அட்டவணையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரையும் இடம் பெற செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close