Published : 12,Dec 2017 02:07 AM

மெட்ரோ ரயில் சுரங்கபாதை அமைக்கும் பணி நிறைவு

Chennai-metro-run-soon-Between-saidapet-to-DMS

சென்னையில் மெட்ரோ ரயில் சுரங்கபாதை பாதை அமைக்கும் பணிகள் முற்றிலுமாக நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, ஓமந்துரார் பல்நோக்கு மருத்துவமனை அருகே உள்ள மே தின பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான 4.1 கிலோ மீட்டர் துரத்திற்கான சுரங்கவழி பாதை அமைக்கும் பணி முற்றிலுமாக முடிவடைந்துள்ளது. 2015ம் ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த பணி நேற்று முடிந்தது. ஏற்கனவே இத்தடத்தில் ஒரு வழி சுரங்கப்பாதை அமைக்கும் பணி அக்டோபர் 18ம் தேதி முடிவடைந்த நிலையில், தற்போது இன்னொரு பாதையும் முடிவடைந்தது. இதேபோல் சைதாப்பேட்டை முதல் சென்ட்ரல் வழியாக வண்ணாரப்பேட்டை வரையிலான 14.3 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதை தயார் நிலையில் உள்ளது. விரைவில் சைதாப்பேட்டை முதல் டி.எம்.எஸ் வளாகம் வரை சோதனை ஓட்டம் நடைபெற்று, மார்ச் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்