[X] Close

சத்யா படம் பார்த்து சிபிராஜை வாழ்த்திய விஜய்

Actor-Vijay-wishes-to-Sibiraj-For-Sathya-Movie

கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘சத்யா’ படத்தை பார்த்த நடிகர் விஜய், கதாநாயகன் சிபிராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Advertisement

சிபிராஜ் நடிப்பில், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘சத்யா’. தெலுங்கு ரீமேக்கான இந்தப் படத்தில், வரலட்சுமி, ரம்யா நம்பீசன், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர்  நடித்துள்ளனர். இது சிபிராஜின் 12வது படமாகும். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்திக்கு இது இரண்டாவது படமாகும். இதற்கு முன் விஜய் ஆண்டனியை வைத்து 'சைத்தான்' என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார்.

கடந்த 8ஆம் தேதி திரைக்கு வந்த ‘சத்யா’ படத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தை பார்த்த நடிகர் விஜய், சிபிராஜ்க்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிபிராஜ், படம் வெற்றி பெற்றது தொடர்பாக விஜய் அண்ணா தொலைபேசியில் வாழ்த்து கூறியது பெருமிதம் அளிப்பதாக கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close