[X] Close

காஞ்சிபுரம் சிறுமி உயிரிழப்பு: ஆம்புலன்ஸ் தாமதம் ஆனதே காரணம் என அறிவிப்பு

Kancheepuram-Minor-Girl-Death-Issue

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிறுமி சரிகாவுக்காக வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ், வரும் வழியில் தாமதம் ஆனதால் குறிப்பிட்ட நேரத்தில் வந்துசேர முடியவில்லை என மருத்துவ நலப்பணிகள் இயக்குநர் இன்பசேகரன் தெரிவித்துள்ளார்.


Advertisement

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரிகா என்ற சிறுமியை உயர் சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதற்காக, சரிகாவின் பெற்றோர் மதியம் 12 மணிக்கு 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். இரவு 7 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்தார்.

இது தொடர்பாக, மருத்துவ நலப்பணிகள் இயக்குநர் இன்பசேகரன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நடத்திய விசாரணையில் ஆம்புலன்ஸ் தாமதம் ஆனதால் உரிய நேரத்தில் சிறுமியை சென்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லமுடியவில்லை என தெரிவித்தார். மேலும், உயிரிழந்த சிறுமிக்கு மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்த பணிமருத்துவர், செவிலியர்கள், மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close