[X] Close

நாட்டின் பிரதமராக இருந்துகொண்டு ஆதாரமில்லாமல் பேசுவதா?: காங். சாடல்

Congress-condemn-PM-Modis-Interference-Charge

பாகிஸ்தான் அதிகாரிகளை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்ததாக பிரதமர் மோடி பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


Advertisement

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் ரகசியமாக சந்தித்தாக குற்றம்சாட்டியிருந்தார். மணிசங்கர் ஐயர் இல்லத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர், ஹமீது அன்சாரி, மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது என குறிப்பிட்டு மோடி பேசினார்.

மோடியின் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் கட்சியின் சுர்ஜிவாலா கூறுகையில், “நாட்டின் உயர் பதவியில் இருக்கும் பிரதமர் மோடி இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார். மோடி கவலை அடைந்துள்ளார். மனம் தளர்ந்துள்ளார். கோபம் அடைந்துள்ளார். அவர் கூறியதில் எவ்வித உண்மையும் இல்லை” என்றார்.


Advertisement

மணி சங்கர் ஐயர் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூர், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வார் சிங் மற்றும் முன்னாள் தூதரக அதிகாரி சல்மான் ஹய்தர், டிசிஏ ராகவன், சரத் சபர்வால், சங்கர் பஜ்பாய் மற்றும் சின்மயா கரேகான் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், ராகவன் மற்றும் சரத் சபர்வால் ஆகியோர் பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக பணியாற்றிவர்கள்.

மோடியின் பேச்சு குறித்து நட்வர் சிங் கூறுகையில், “கூட்டத்தில் என்ன நடந்தது என்று மோடிக்கு எப்படி தெரியும்? இந்தியா பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசப்பட்டது. அரசியல் குறித்து எதும் பேசப்படவில்லை” என்றார். அதேபோல், கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுவதாக கூறுவது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபாய்சல் கூறியுள்ளார். மேலும், தேர்தல் விவாதங்களில் பாகிஸ்தானை இழுப்பதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற கற்பனைகளை விட்டுவிட்டு ஈடுபடுவதை விட சொந்த பலத்தை கொண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அவர் கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close