[X] Close

இந்திய பேட்ஸ்மேன்களை கலாய்த்த நெட்டிசன்கள்

Netisans-on-Indian-batsmans-collaps-in-Srilanka-ODI

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில், பேட்ஸ்மேன்களை கலாய்த்து நெட்டிசன் நிறைய மீம்ஸ்களை பதிவிட்டனர். 


Advertisement

தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 8 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. 29 ரன்கள் எடுத்த நிலையில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தோனியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி மிக குறைந்த ஸ்கோர் எடுப்பதில் இருந்து தப்பித்தது. தோனி இறுதிவரை போராடி 65 ரன்கள் எடுத்து கடைசியாக ஆட்டமிழந்தார். 112 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. இந்திய அணியில் 4 பேர் டக் அவுட் ஆகினர். 3 பேர் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. 

 


Advertisement

இந்திய அணி பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தை விமர்சித்து நெட்டிசன் நேற்று மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் குவித்தது. கோலி இல்லாத நிலையில், ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. திருமணம் விவகாரம் தொடர்பாக கோலி சென்றுள்ள நிலையில் அவரது மனநிலையை சுட்டிக்காட்டி மீம்ஸ்கள் போட்டனர்.

          

 


Advertisement

              

அதேபோல், அனைத்து பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழந்த பிறகும் தோனி மட்டும் தனியாக போராட்டி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது குறித்து தான் அதிக மீம்ஸ்கள் இடம்பெற்றன. குறிப்பாக தோனியை ஓய்வு பெற சொன்னவர்களை கலாய்த்து தள்ளி இருந்தனர்.

                  

இதனிடையே, ஆட்டத்தின் போது நிகழ்ந்த மற்றொரு சுவாரஸ்சியமான நிகழ்வையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டினர். பும்ராவுக்கு நடுவர் எல்.பி.டபிள்யூ கொடுத்த போது, நடுவர் கையை உயர்த்துவதற்கு முன்பே, தோனி ரிவிவ்யூ கேட்டார். இதுதான் தோனி ரிவிவ்யூ சிஸ்டம் என்று பலரும் குறிப்பிட்டு மீம்ஸ்கள் போட்டனர். அவுட் இல்லை என ரிவிவ்வில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

            


Advertisement

Advertisement
[X] Close