Published : 10,Dec 2017 05:29 AM

விராத் - அனுஷ்கா திருமணம் உண்மைதான்: இத்தாலி ரிசார்ட்ஸில் பலத்த பாதுகாப்பு!

Virat-Kohli-Anushka-Sharma-wedding-confirmed

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலியும் இந்தி நடிகை அனுஷ்கா ‌ஷர்மாவும் 2013 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். ’அனுஷ்கா என் வாழ்க்கையில் வந்த பிறகு பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது’ என்று விராத் கோலி ஒரு பேட்டியில் கூறியிருந்ததை அடுத்து, இவர்கள் காதலிப்பது உறுதியானது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் இருந்து தனக்கு ஓய்வு வேண்டும் என்று விராத் கோலி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இது திருமணத்துக்கான விடுமுறை என கூறப்பட்டது.

இதற்கிடையே, கோலி தனது குடும்பத்தினருடன் டெல்லியில் இருந்து வெளிநாடுக்கு புறப்பட்டார். அதே நேரத்தில் அனுஷ்காவும் மும்பையில் இருந்து தன் குடும்பத்தினருடன் வெளிநாடு சென்றார். ’திருமணம் செய்துகொள்வதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை’ என்று அனுஷ்காவின் செய்தி தொடர்பாளர் கூறியிருந்தார். 

இந்நிலையில் இவர்கள் திருமணம் இத்தாலியில் நடக்க இருப்பது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது. அங்குள்ள டஸ்கேனி நகரில் உள்ள ஹெரிடேஜ் ரிசார்ட்ஸில் திருமணம் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி. பஞ்சாபி முறைப்படி நடக்கும் இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்கின்றனர்.

பின்னர், டிசம்பர் 26-ம் தேதி டெல்லியில் திருமண வரவேற்பு நடக்கிறது. இதில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். 27-ம் தேதி இரவு இந்திய கிரிக்கெட் அணி, மும்பையில் இருந்து தென்னாப்பிரிக்கா செல்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்