Published : 10,Dec 2017 04:53 AM

காதல் விவகாரத்துக்கு பதில் சொல்லி அலுத்துவிட்டது: அஞ்சலி அப்செட்!

I-am-bored-of-answering-love-question--Anjali

காதல் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லி அலுத்துவிட்டது என்று நடிகை அஞ்சலி கூறினார்.

நடிகை அஞ்சலியும் நடிகர் ஜெய்யும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதை இருவரும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் மறைமுகமாக குறிப்பிட்டே வருகின்றனர். நடிகர் ஜெய் பிறந்த நாளுக்கு அஞ்சலி டிவிட்டரில் அனுப்பிய வாழ்த்து செய்தியும் பரபரப்பானது. இந்நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் செய்தி வெளியானது. 

இதுபற்றி அஞ்சலி கூறும்போது, ’காதல் பற்றிய கேள்விக்கு பதில் சொல்லி அலுத்துவிட்டது. நானும் ஜெய்யும் சில படங்களில் இணைந்து நடித்துள்ளோம். இப்போது பலூன் படத்தில் நடித்துள்ளோம். அவர் சிறந்த நடிகர். சமூக வலைத்தளங்களில் எங்களைப்பற்றி பலர் பலவிதமாக எழுதி வருகிறார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. காதல் விவகாரத்துக்கு பதில் சொல்லி போரடித்துவிட்டது.

இப்போது மம்மூட்டியுடன் பேரன்பு படத்தில் நடித்துள்ளேன். என்னை தமிழில் ’கற்றது தமிழ்’ படத்தில் அறிமுகப்படுத்திய ராம் இயக்கும் படம். அந்தப் படத்தில் என் கேரக்டர் பெயர் ஆனந்தி. படப்பிடிப்பின்போது அப்படியே என்னை அழைப்பார் ராம். மம்மூட்டி சாருக்கு குழப்பம். உங்க பெயர் அஞ்சலியா, ஆனந்தியா என்று கேட்டார். நான் விளக்கினேன். எதற்கு சொல்கிறேன் என்றால் கேரக்டரோடு வாழ்பவர் இய்க்குனர் ராம்’ என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்