இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கும் மதுக்கூடத்துக்கும் அப்படியென்ன பந்தமோ தெரியவில்லை. அடிக்கடி ஏதாவது ஒரு பஞ்சாயத்து வந்துகொண்டே இருக்கிறது. ஏற்கனவே ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், மதுக்கூடத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கடுமையாகத் தாக்கியதை அடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அந்த அணி ஆஷஸ் தொடரில் விளையாட, ஆஸ்திரேலியா வந்தது.
முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், கிரிக்கெட் வீரர்கள் மதுக்கூடத்துக்குச் சென்றுள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பான்கிராஃப்டை, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர், ஜானி பேர்ஸ்டோவ் தலையால் முட்டிய விவகாரம் பெரும் பிரச்னையானது.
இந்நிலையில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது மதுவை வேண்டுமென்ற ஊற்றிய விவகாரம் இப்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பெர்த் மதுக்கூடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுபற்றி இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரேவோர் பேலிஸ் கூறும்போது, ’இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. வீரர்கள் இப்படியே மோசமாக நடந்துகொண்டிருந்தால், அணியில் மாற்றங்கள் செய்வதை தவிர்க்க முடியாது. ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருப்பதை ஏற்க முடியாது. பெரும்பாலான வீரர்கள் நன்றாக இருக்கும்போது சில வீரர்கள் இப்படி தவறாக நடந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்