[X] Close

குஜராத் தேர்தலில் புளுடூத் மூலம் முறைகேடு?: தேர்தல் ஆணையம் மறுப்பு

Election-commission-refused-congress-allegations

குஜராத் சட்டப்பேரவைக்கு நேற்று நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் புளுடூத் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

குஜராத் சட்டப்பேரவைக்கு முதற்கட்டமாக நேற்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 68 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனிடையே, குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் போது போர்பந்தரில் ஒரு வாக்குச்சாவடியில் புளுடூத் கருவி இருப்பதை தமது செல்போன் மூலம் கண்டுபிடித்ததாக மூத்த காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா கூறினார். இதனால் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றதாக
அவர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தார்.

ஆனால் இது தொடர்பாக விசாரித்தபோது, பூத் ஏஜெண்ட் ஒருவரின் புளுடூத்தையே அர்ஜூன் மோத்வாடியா கண்டுபிடித்ததாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் புளுடூத் உள்ளிட்ட எந்த தொடர்பும் சாத்தியமில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. குஜராத்தில் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு வரும் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் வரும் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close