இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாகக் கூறி பாரதிய ஜனதா கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வேட்பாளர் கரு.நாகராஜன் மற்றும் தொண்டர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பலர் தொகுதிக்குள் தங்கியிருப்பதாகவும், பணப்பட்டுவாடா செய்ய டோக்கன்கள் வழங்கப்படுவதாகவும் தமிழிசை குற்றம்சாட்டினார். பட்டப் பகலிலேயே பணப்பட்டுவாடா நடைபெறுவதால் இடைத் தேர்தலை நடத்திப் பயனில்லை எனக் குறிப்பிட்ட தமிழிசை, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
ஆர்.கே.நகரில் ஏற்கெனவே முறைகேடாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறி இடைத்தேர்தலை ரத்து செய்திருந்தது தேர்தல் ஆணையம் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்' - ஐ.நா அமெரிக்க தூதர் நம்பிக்கை
பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமையும் நிலைநாட்டப்பட்டுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்