[X] Close

ஏலத்துக்கு வருகிறது கிராமம்!

An-Entire-German-Village-Will-Go-Up-For-Auction

ஏலத்துக்கு எதெல்லாம் வரும்? கார், வீடு, நகைகள்...இவைதான் நமக்குத் தெரியும். ஆனால், ஜெர்மனியில் ஒரு கிராமமே ஏலத்தில் விடப்பட இருக்கிறது.


Advertisement

ஜெர்மனி கிழக்கு, மேற்கு என தனித் தனியாக இருந்த காலகட்டத்தில் கிழக்கு ஜெர்மனியின் பிராண்டன்பர்க் மாநிலத்தில் இருந்த கிராமம் ஆல்வின். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஹிட்லர் இந்த ஊரின் அருகில்தான் இளைஞர்களுக்கு போர் பயிற்சி அளித்தாராம். இதன் அருகில்தான் போர்க்கைதிகள் அடைக்கப்பட்டிருந்தார்கள்.


Advertisement

இங்கு நிலக்கரி சுரங்கம் இருந்தது. வெறும் 50 பேர் மட்டுமே இந்த கிராமத்தில் வசித்தனர். 1990-ல் கிழக்கும் மேற்கும் இணைந்து ஒரே ஜெர்மனி ஆனதும், நிலக்கரி சுரங்கம் மூடப்பட்டது. அங்கிருந்த இளம் வயதினர் மேற்கில் குடிபெயர்ந்தனர். இதையடுத்து அந்தக் கிராமம் வளர்ச்சி அடையாமல் அப்படியே இருந்தது. 2000-ம் ஆண்டில் தனியார் முதலீட்டாளர் ஒருவர் கிராமத்தை மறு சீரமைப்பதற்காக வாங்கினார். ஆனால், அவர் அதை செய்யவில்லை. 

இதையடுத்து இந்தக் கிராமத்தை ஏலத்துக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது இக்கிராமத்தில் ரிடையர்ட் ஆன சுமார் 20 பேர் மட்டுமே வசிக்கின்றனர். 12 பழமையான கட்டிடங்கள் இருக்கின்றன. ஏலத்தின் ஆரம்ப விலை 147,230 அமெரிக்க டாலர்கள். அதாவது சுமார் 95 லட்சத்து 69 ஆயிரத்து 950 ரூபாய். இந்தக் கிராமத்தை யார் வாங்க போகிறார்கள் என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்!


Advertisement

Advertisement
[X] Close