ஆர்.கே.நகரில் பிரச்சாரத்திற்கு கட்டுப்பாடுகள்

ஆர்.கே.நகரில் பிரச்சாரத்திற்கு கட்டுப்பாடுகள்
ஆர்.கே.நகரில் பிரச்சாரத்திற்கு கட்டுப்பாடுகள்

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்களுடன் எத்தனை பேர் செல்வார்கள் என்று முன் அனுமதி பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் சின்னங்கள் வழங்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் பிரச்சாரத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்களுடன் எத்தனை பேர் செல்வார்கள் என்று முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற நபர்களை விட கூடுதலான நபர்கள் பிரச்சாரத்திற்கு சென்றால், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் பிரச்சாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விதியை மீறினால், அதன்பிறகு அந்த வேட்பாளர் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் பூத் சீட்டு வழங்க தடை செய்யப்பட்டுள்ளதாகவும், வீதிகளில் பூத் அமைத்து பிரச்சாரம் மேற்கொண்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வரும் 12ஆம் தேதி முதல் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும் என்றும், அன்றைய தினம் துணை ராணுவப்படை வரவிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com