Published : 08,Dec 2017 10:11 AM

2,805 மீனவர்கள் பத்திரமாக உள்ளனர்: ஜெயக்குமார்

Minister-Jayakumar-said-about-TN-fishermen-return-to-Tamilnadu

பிற மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ள தமிழக மீனவர்கள்‌ விரைவில் சொந்த ஊர்களுக்கு அழைத்துவரப்படுவர் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளா‌ர்.

ஒகி புயலால் திசை மாறி சென்ற தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் லட்சத்தீவு, குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் அங்கு உணவின்றி தவிப்பதாகவும், சொந்த ஊர்த் திரும்ப டீசல் இல்லை என்றும் கூறப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு டீசல் வழங்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவர்களுக்கு டீசல் வழங்கப்பட்டு வருகிறது.


இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “கேரளா, லட்சத்தீவு, மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் போன்ற பகுதிகளில் மொத்தம் 301 மீன்பிடி படகுகளும், 62 சிறிய ரக படகுகளும் உள்ளன. அவற்றின் மூலம் 2,805 மீனவர்கள் பத்திரமாக உள்ளதாக, அங்கு சென்று ஆய்வு செய்துள்ள தமிழக அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். அந்த மீனவர்கள்‌ விரைவில் சொந்த ஊர்களுக்கு அழைத்துவரப்படுவர்” என்று கூறினார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்