
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப் சி அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைப்பெற்ற
போட்டியில் சென்னையின் எஃப்சி அணி கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. சென்னையின் சொந்த மைதானத்தில் இந்தப்போட்டி நடைபெற்றதால் ஏராளமான
ரசிகர்கள் குவிந்தனர். விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் 3-2 என்ற கோல்கள் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது.
சென்னை அணிக்காக நட்சத்திர வீரர்களான ஜேஜே இரண்டு கோல்களும், இனிகோ கால்ட்ரன் ஒரு கோலும் அடித்தனர். நடப்பு சீசனில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்த சென்னையின் எஃப் சி அணி, 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஐஎஸ்எல் தொடரில் மோசான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னையின் எஃப்சி அணி இந்த முறை தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறது.