
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியில் மாற்றுத்திறனாளி ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து பிரியும் கிளை ஆறான மலட்டாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தணிகைவேல் என்ற மாற்றுத்திறனாளி சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பணை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில்
விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையாலும் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீராலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.