[X] Close

ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

The-storm-should-be-declared-as-a-national-disaster--Chief-Minister-s-letter-to-the-Prime-Minister

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவித்து உரிய நிதி உதவி அளிக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஒகி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் முன்னரே பல மீனவர்கள் கடலுக்குள் சென்றுவிட்டனர். அதனால் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை எச்சரிக்கமுடியாத சூழல் ஏற்பட்டது. அரபி கடலோரப் பகுதியில் கன்னியாகுமரி முதல் குஜராத், மாலத்தீவுகள் வரையும் தேடுதல் பணியை தொடரும்படி பாதுகாப்புத்துரைக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியுள்ளார். 

மேலும் “கன்னியாகுமரியில் பெரும் சேதத்தை விளைவித்த ஒகி புயலை தேசிய பேரிடராக உடனடியாக அறிவிக்கவேண்டும். மழையாலும் புயலாலும் மிகவும் சேதமடைந்த உட்கட்டமைப்பை சீரமைக்க தேவையான நிதி உதவிகளை அளிக்கவேண்டும். சேதம் தொடர்பான விரிவான அறிக்கை பின்னர் சமர்ப்பிக்கப்படும். தற்போதைய பிரச்னைகளை சமாளிக்க மத்திய அரசின் உடனடி உதவி தேவை” என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close