காவல்துறை பிடியிலிருந்து தஷ்வந்த் தப்பியோட்டம்

காவல்துறை பிடியிலிருந்து தஷ்வந்த் தப்பியோட்டம்
காவல்துறை பிடியிலிருந்து தஷ்வந்த் தப்பியோட்டம்

மும்பையில் கைது செய்யப்பட்ட சிறுமி ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் தப்பியோடிவிட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை போரூர் அருகே ஹாசினி என்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உடலை எரித்த கொலையாளி தஷ்வந்த், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்திருந்தார். இதையடுத்து குன்றத்தூரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த தஷ்வந்த், அவரது தாய் சரளாவை கம்பியால் தாக்கி கொலை செய்தார். அத்துடன் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து தமிழக காவல்துறையினர் தேடி வந்தனர். 

இதையடுத்து தலைமறைவாக இருந்த குற்றவாளி தஷ்வந்தை மும்பையில் தமிழக காவல்துறை தனிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்ததைத் தொடர்ந்து, தஷ்வந்தை மும்பை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தி சென்னைக்கு அழைத்து வந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் சென்னைக்கு வரும் வழியில் தஷ்வந்த தப்பியோடியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறியுள்ளனர்.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com