
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்.கே நகரில் மொத்தம் 72 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 13 பேர் வேட்புமனுவை திரும்பப்பெற்றுள்ளனர். இதனால் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் 59 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதில் நடிகர் விஷாலின் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. அத்துடன் ஜெ. தீபா உட்பட 73 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தேர்வாகியுள்ள வேட்புமனுக்களின் படி, ஆளும் அதிமுக சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். மேலும், சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் உள்பட 59 வேட்பாளர்கள் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். ஆர்.கே நகர் தேர்தலை பொறுத்தவரையில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் மட்டும் போட்டியிடுகிறார். நாளை முதல் அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் என அனைவரும் பிரசாரக் களத்தில் இறங்குவர் என்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.