Published : 07,Dec 2017 07:48 AM

புஜாரா ஹேண்ட் பிரேக்குடன் ஓடும் கார்: கவாஸ்கர் கமெண்ட்

Sunil-Gavaskar--In-Commentary--Taunts-2-Indian-Players-Over-Fielding

இந்தியா - இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் ஃபீல்டிங் மோசமானதாக இருந்தது என முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸின் கடைசி நாளில் இந்திய வீரர்களின் ஃபீல்டிங் மோசமானதாக இருந்தது. குறிப்பாக ஸ்லிப்பில் நின்ற வீரர்கள் கோலி உட்பட பலரது ஃபீல்டிங் மோசமானதாக இருந்து. வெற்றி பெறும் நிலையில் இருந்த கடைசி டெஸ்ட் இந்திய வீரர்களின் மோசமான செயல்பாட்டால் ஆட்டம் டிரா ஆனது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர், இந்திய வீரர்கள் புஜாரா, அஸ்வினின் ஃபீல்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். புஜாரா பந்தை துரத்திக்கொண்டு எல்லைக்கோடு வரை ஓடுவதை பார்த்தால் ஹேண்ட் பிரேக்குடன் ஓடும் கார் போல காணப்படுகிறார். அதேபோல் அஸ்வினுக்கு பந்தை தடுக்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது ஆனால் அது செயலில்  வெளிப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்