[X] Close

விஷால் வேட்புமனு மீண்டும் பரிசீலனை?: தேர்தல் ஆணையம் விளக்கம்

Election-commission-remarks-about-vishal-petition

விஷால் வேட்புமனுவை முன்மொழிந்து பின் மறுத்த 2 பேரும், மாலை 3 மணிக்குள் தேர்தல் அலுவலரை சந்தித்து விளக்கும் அளிக்கும்பட்சத்தில் மனு மீது மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்தார். விஷால் வேட்பு மனுவை ஆர்.கே.நகரில் வசிக்கும் 10 பேர் முன்மொழிந்திருந்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது விஷாலை முன்மொழிந்ததாக கூறப்பட்டவர்களில் 2 பேர், நாங்கள்  விஷாலை முன்மொழியவில்லை, போலியாக எங்களது கையெழுத்து போடப்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரி முன்பு ஆஜராகி தெரிவித்தனர். இதனால் விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம், விஷால் முறையிட்டார். தன்னை முன்மொழிந்தவர்களை அதிமுகவினர் மிரட்டியதாவும், அதுதொடர்பான ஆடியோ ஆதாரத்தையும் அவர் சமர்ப்பித்தார். பின், சில திருத்தங்களுக்கு பிறகு ஆதாரங்களின் அடிப்படையில் வேட்புமனு ஏற்கப்பட்டதாக விஷால் தெரிவித்தார். ஆனால் விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக நள்ளிரவு 11 மணியளவில் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.


Advertisement

இந்நிலையில் விஷால் வேட்புமனுவை முன்மொழிந்து பின் மறுத்த 2 பேரும் மாலை 3 மணிக்குள் தேர்தல் அலுவலரை சந்தித்து விளக்கும் அளிக்கும்பட்சத்தில் மனு மீது மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாக உள்ளது.


Advertisement

Advertisement
[X] Close