தொடர்ந்து 48 மாதமாக விளையாடி வருகிறேன். அதனால் எனது உடல் இப்போது ஓய்வைக் கேட்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.
டெல்லியில் நடைபெற்ற இந்திய- இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் சமனில் முடிவடைந்தது. இதனையடுத்து இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி கூறும்போது, ‘நேற்றைய போட்டியில் வெற்றி பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. சிலிப்பில் நாங்கள் சில கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டோம். அதை சரியாக செய்திருந்தால் இலங்கை அணியை இன்னும் கட்டுப்படுத்தி இருக்க முடியும். ஃபீல்டிங்கில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கையின் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய போதும், வெற்றியுடன் போட்டியை முடிக்க முடியாதது ஏமாற்றம்தான். இலங்கை வீரர்கள் நன்றாக விளையாடினார்கள்.
கடந்த 48 மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறேன். இப்போது என் உடல் ஓய்வு கேட்கிறது. அதனால் இலங்கை அணியுடனான ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கவில்லை’ என்றார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்