[X] Close

பிரம்மாண்டமான அம்பேத்கர் சர்வதேச மையம்: மோடி நாளை திறக்கிறார்

PM-Modi-likely-to-unveil-Ambedkar-centre-with-70-ft-stupa

டெல்லியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.

கடந்த 1990-ம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, அம்பேத்கரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவாக டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையம் அமைப்பதற்கு தேசிய கமிட்டி பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசு அம்பேத்கர் சர்வதேச மையத்துடன் அம்பேத்கர் தேசிய பொது நூலகம் அமைக்க முடிவு செய்து அதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அம்பேத்கர் சர்வதேச மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 2015-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி நடைபெற்றது. பிரதமர் நரேதிர மோடி அடிக்கல் நாட்டினார்.

கடந்த இரண்டு வருடங்களாக இதற்காக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நாளை திறப்பு விழா நடைபெறவுள்ளது. பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். நாளை காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. டெல்லி ஜன்பத் சாலையில் இந்த மையம் உள்ளது. 


Advertisement

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களை பதிவிட்டுள்ளார். அதில் பிரம்மாண்டமான வடிவமைப்பு, அம்பேத்கர் சிலை என படங்கள் உள்ளன. மேலும், இந்தக் கட்டடத்தை அம்பேத்கருக்கு சமர்பிக்க உள்ளதாக அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். நவீன புத்தர்கால கலை வடிவத்துடன் இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close