Published : 06,Dec 2017 01:20 PM
ராமர் கோயில் குறித்து பேச இருந்த சுப்பிரமணியன் சுவாமி நிகழ்ச்சி ரத்து

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ராமர் கோயில் குறித்து பேச இருந்த பாஜக தலைவர், சுப்பிரமணியன் சுவாமி நிகழ்ச்சி பல்கலைக்கழக நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டு 26வது ஆண்டுகள் ஆகியுள்ளன. இதன் நினைவு தினம் நாடு முழுவதும் டிசம்பர் 6 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளையொட்டி ஹைதரபாத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணியன் சுவாமி நிகழ்த்த இருந்த உரையை அனுமதிக்காததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
"அயோத்யாவில் ஏன் ராமர் கோயில் கட்டவேண்டும்" என்ற தலைப்பில் சுப்பிரமணியன் சுவாமி உரை நிகழ்த்தவிருந்தார். கொய்னா மாணவர்கள் விடுதியில் சுப்பிரமணியன் சுவாமி பேச இருந்த நிலையில்,இந்நிகழ்ச்சி பல்கலைக்கழக நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டது. பாஜக ஆதரவு மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு ரத்தாகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.