Published : 06,Dec 2017 01:05 PM

கொடி நாளுக்கு முதல்வர் வேண்டுக்கோள்

The-flag-will-request-the-chief-of-the-day

கொடி நாள் நிதிக்கு அதிமாக நன்கொடை வழங்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இதுக்குறித்து  அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் பழனிசாமி கடந்த 13 ஆண்டுகளாக மக்கள் தொகை அடிப்படையில் கொடி நாள் வசூலில் தமிழகம் தேசிய அளவில் முதலிடம் வகிப்பதாக தெரிவித்துள்ளார். 

முன்னாள் படைவீரர்கள், ஊனமுற்ற படைவீரர்கள், போர் விதவைகள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்காக தமிழ்நாடு அரசின் முன்னாள் படை வீரர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்காகவே கொடி நாளில் திரட்டப்படும் நன்கொடைகள் முழுவதுமாகப் பயன்படுத்தப்படுகிறது என்றார். எனவே இந்த சிறப்பு மிகுந்த கொடி நாளுக்கு அனைவரும் தாரளமாக நன்கொடை வழங்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். 

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்