Published : 06,Dec 2017 12:11 PM

திருமாவளவன் தெரியாமல் கூறுகிறார்: ஜெயக்குமார் பதில்

Minister-Jayakumar-reply-to-Thirumavalavan-for-Ambedkar-Memorial-day

தமிழக அரசு சார்பில் அம்பேத்கரின் பிறந்த தினம் மட்டுமே விழாவாக நடத்தப்படுவதாகவும், நினைவு தினம் அனுசரிக்கப்படுவதில்லை என திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

அம்பேத்கரின் 61ஆம் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்‌படுகிறது. இதையொட்டி அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில், பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்படி சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த‌ திருமாவளவன், தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் அமைச்சர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பார்கள் இந்த ஆண்டு ஏன் விளம்பரம் கூட செய்யவில்லை என அரசு விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்தார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஒவ்வொரு வருடமும் மறைந்த சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழாதான் அரசு நிகழ்ச்சியாக எப்போதுமே அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் பிறந்த தினம் அன்றுதான் அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த முறைதான் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே நினைவு தினத்தை அனுசரிக்கவில்லை என திருமாவளவன் தெரியாமல் கூறுகிறார்” என்று தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்