ஓகி புயலால் காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்கள் 65 பேரையும் தேடும் பணி தொடர்வதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி அருகே ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒகி புயலாக உருவெடுத்து கன்னியாகுமரியை சூறையாடிச் சென்றது. இந்த புயலால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான தமிழக மற்றும் கேரள மீனவர்கள் கடலில் சிக்கிக் கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் உயிருடனும், பலர் உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் புயலினால் ஏற்பட்ட தாக்கத்தின்போது தமிழகத்தில் 74 மீனவர்களும், கேரளாவில் 93 மீனவர்களும் காணாமல் போய் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஓகி புயலால் கடலில் காணாமல் போன கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 65 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போய்விட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்களது எண்ணிக்கையை குறைத்துக் காட்ட வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல என்றும் கூறினார். டிஎன்ஏ ஆய்வு செய்த பின்னரே உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை தெரிவிக்கப்படும் எனவும் அவர் எடுத்துரைத்தார். மேலும் குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்களை சொந்த ஊர் அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துக்கொண்டார்.
Loading More post
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
“எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?” - சீமான் காட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தல் - திரெளபதி முர்முவின் பக்கம் சாயும் மம்தா பானர்ஜி! பின்னணி என்ன?
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?