Published : 05,Dec 2017 04:17 PM

800 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்

800-Kg-Drugs-caught-in-Covai

கோவை வழியாக பிறமாநிலங்களுக்கு பேருந்து மூலம் கடத்தப்பட்ட 800 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

பெங்களூருவில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் பேருந்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் கடத்தப்பட்டது. இதை அறிந்த உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்து போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி பேருந்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க முகவரிகள் இல்லாத பார்சல்களைக் கொண்டுவரும் பேருந்துகள், கோவை நகரத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பேசிய அதிகாரிகள், கடத்தல் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க 9600873681 என்ற வாட்ஸ் ஆப் எண் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரமும் அதில் தகவல்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர். புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில் அவற்றை விற்பனை செய்வோர் மீது வழக்குப்பதிவு உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்