
நடிகர் விஷாலின் அரசியல் பிரவேசத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். காமராஜர் நினைவில்லத்திலும், ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திலும் அவர் மரியாதை செய்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “நான் அரசியல்வாதியாக தேர்தலை பார்க்கவில்லை, மக்களுடைய பிரதிநிதியாக பார்க்கிறேன். சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வாழ்க்கையை மக்கள் கேட்கவில்லை. சுதந்திரம் பெற்றது முதலே மக்கள் அடிப்படை வசதியை மட்டுமே கேட்டு வருகிறார்கள். இன்னும் ஏன் அது கிடைக்கவில்லை என்று மக்கள் சிந்திக்கிறார்கள். ஒரு மாற்றம் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காகத்தான் நான் ஆர்.கே நகரில் நிற்கிறேன்.” என்று கூறினார்.
இந்நிலையில் நடிகர் விஷாவின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவு தெரித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் “வாழ்த்துகள். நீங்கள் அரசியலில் நுழைவது இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமையும். டெல்லி வரும் போது நிச்சயம் வாருங்கள் நேரில் பார்ப்போம்” என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.