[X] Close

குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு அனுமதியா? : இன்று முடிவை அறிவிக்கிறது ஒலிம்பிக் கமிட்டி

Permit-Russia-in-the-Winter-Olympics----The-announcement-of-the-decision-today-is-the-Olympic-Committee

தென்கொரியாவில் வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில், ரஷ்ய அணிக்கு ஒட்டுமொத்தமாக தடைவிதிப்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இன்று முடிவு எடுக்கிறது. 

முந்தைய ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் ரஷ்ய வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கக்கூடாது என பல்வேறு நாடுகள் ஒலிம்பிக் கமிட்டிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் ரஷ்ய வீரர்களுக்கு அனுமதி அளிப்பதா அல்லது தடை விதிப்பதா என்பதை முடிவு செய்ய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயற்குழு இன்று கூடுகிறது.

சமீபத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய 3 பேருக்கு ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகம், தடை விதித்தது. இந்நிலையில் இன்று குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close