திரையரங்குகளில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது.
திரையரங்குகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு முறையற்ற வகையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக நீண்ட காலமாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் திரையரங்குகளில் வானக நிறுத்தக் கட்டணத்தை அதிகபட்சமாக ரூ.20 ரூபாய் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சிகளில் கார் மற்றும் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 20 ரூபாயும், இருசக்கர மோட்டார் வாகனங்களுக்கு 10 ரூபாயும் பார்க்கிங் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நகராட்சிப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் கார் மற்றும் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 15 ரூபாயும், இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 7 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகர, கிராம பஞ்சாயத்துகளில் உள்ள திரையரங்குகளில் கார் மற்றும் மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 5 ரூபாயும், இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 3 ரூபாயும் கட்டணமாக தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. எல்லாப் பகுதிகளிலும் மிதிவண்டிகளுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்