Published : 05,Dec 2017 08:26 AM

மீனவர்கள் 4 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம்

Dont-go-to-sea--advice-for-fishermen

தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் இன்று தொடங்கி வரும் 8 ஆம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒகி புயல் நேரத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்கள் இதுவரை முழுமையாக மீட்கப்படவில்லை. காணாமல் போன மீனவர்கள் எப்போது வீடு திரும்புவார்கள் என உறவினர்கள் ஏக்கத்துடன் காத்திருக்க மீனவர்களை தேடும் பணியும் தீவிரமாகத் தான் நடைபெற்று வருகிறது. இதனிடைய ஒகி புயல் நேரத்தில் கடலில் மாயமான 2,864 மீனவர்களில் 2,604 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடதமிழகம், தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிக்கு நகரும் எ‌ன சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இதனால், மீனவர்கள் இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் தங்கி இருக்கும் மீனவர்களும் கரை திரும்பவும் வானிலை மைய இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்