
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷாலின் சொத்துமதிப்பில் சந்தேகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் விஷால் தனது வேட்புமனுவினை நேற்று தாக்கல் செய்தார். வேட்புமனுவில், 1 கோடியே 6 லட்சத்து 64,141 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகள் உள்ளதாக விஷால் குறிப்பிட்டுள்ளார். சொத்து மதிப்பில் பெரும்பாலும் காரின் மதிப்பே 95 சதவீதம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாக்குவார், பி.எம்.டபியூ உள்பட 4 கார்களின் விலை 1 கோடியே 4 லட்சத்து 18,000 ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. அசையா சொத்துகள் ஏதும் இல்லை எனவும் விஷால் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அவர் தனக்கு 7.5 கோடி ரூபாய் அடமான கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், நடிகர் விஷால் கடன் பெற எதனை அடமானமாக வைத்துள்ளார் என தெரியவரவில்லை. தன்னிடம் அசையாக சொத்துகள் இல்லை என குறிப்பிட்டுள்ள நிலையில் அடமான கடன் குறித்த விவரம் முரண்பாடாக இருக்கிறது.