இலங்கை அணியுடனான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 19 வயது வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர், வாஷிங்டன் சுந்தர். ஆல்ரவுண்டரான இவர் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். இதையடுத்து துலீப் டிராபி மற்றும் ரஞ்சிப் போட்டிகளில் நன்றாக விளையாடியதை அடுத்து இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குழுவின் பார்வை இவர் மீது பட்டது.
இதையடுத்து யோ- யோ டெஸ்டுக்கு அழைக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த இந்த டெஸ்ட்டில் தோல்வி அடைந்தவர், சமீபத்தில் நடந்த தேர்வில் வெற்றி பெற்றார். இதையடுத்து இலங்கைக்கு எதிரான டி20 அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.
இது பற்றி வாஷிங்டன் சுந்தர் கூறும்போது, ‘இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பது அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் கனவு. எனக்கும் அப்படித்தான். டீன் - ஏஜில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுபோன்ற வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைப்பது அரிது. எனது தந்தை சுந்தர், பயிற்சியாளர்கள் செந்தில்நாதன், வெங்கட்ரமணா ஆகியோர்தான் இதற்கான அதிக உதவி செய்திருக்கிறார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன் யோ- யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெறாமல் போனதில் ஏமாற்றமடைந்தேன். அப்போது வெற்றிபெற்றிருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடியிருப்பேன். அது நடக்காமல் போனது வருத்தமாக இருந்தது. பிறகு நடந்த உள்ளூர் போட்டிகளில் கடுமையாக பயிற்சி செய்து விளையாடினேன். அதற்கான பரிசாக இதை நினைக்கிறேன்’ என்றார்.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?