
வோடஃபோன் நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களில் 5 புதிய ஆஃபர்களை அறிவித்துள்ளது.
ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு தரும் அதிரடியான பல சலுகைகளை தொடர்ந்து, ஏர்டெல், ஐடியா, ஏர்செல் போன்ற மொபைல் நிறுவனங்களும் ரீசார்ஜ் திட்டங்களில் பல மாற்றங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது வோடாஃபோன் நிறுவனமும் களத்தில் குதித்து உள்ளது. இதன்படி வோடஃபோனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு ஒரு ஜிபி டேட்டா, 100 இலவச குறுங்தகவல், அன்லிமிடெட் வாய்ஸ் ஆஃபர், ஆகியவற்றை 84 நாட்களுக்கு பயன்படுத்தலாம். ரூ.458-க்கு ரீசார்ஜ் செய்தால் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன், 100 இலவச குறுந்தகவல், அன்லிமிடெட் வாய்ஸ் ஆஃபரை 70 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.
அதேபோல் ரூ.347-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு பெற முடியும். ரூ.199-க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கும், ரூ.79-க்கு ரீசார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கும் இந்த ஆஃபரை பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வோடாஃபோனின் இந்த சலுகை திட்டம் வாடிக்கையாளர்களுக்கு பயன் உள்ளதாய் இருக்கும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முரளி தெரிவித்துள்ளார்.