[X] Close

புதிய கோள்கள் பற்றி இன்று அறிவிக்கி‌றது நாசா..!

NASA-Announcing-a-Big-Discovery-Beyond-Our-Solar-System

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, புதிய கோள்கள் பற்றிய விவரங்களை இன்று வெளியிடுகிறது.


Advertisement

அமெரிக்க நேரப்படி மதியம் 1 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு விஞ்ஞானிகள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அப்போது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களை பற்றிய புதிய கண்டுபிடிப்பு விவரங்களை அவர்கள் வெளியிடுகின்றனர்.

இதனை நாசா தொலைக்காட்சியிலும் இணையதளத்தில் நேரலையாகவும் காணலாம். Asknasa என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, டிவிட்டர் மூலம் விஞ்ஞானிகளிடம் கேள்விகளையும் கேட்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. நாசா அறிவிக்கப்போகும் புதிய கண்டுபிடிப்புகள் ‘நேச்சர்’ இதழிலும் வெளியாகவுள்ளன. புதிய கோள்கள் தொடர்பாக அறிவிக்கப் போவதாக நாசா சொல்லி இருப்பதால் என்னென்ன புது தகவல்கள் வெளியாகவுள்ளன என விண்வெளி ஆர்வலர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close