[X] Close

அமித்ஷா இந்துவே அல்ல: ஓவைசி

Amit-Shah-is-not-Hindu-but-presents-himself-as-one-Owaisi

பாஜக தலைவர் அமித்ஷா ஒரு இந்துவே அல்ல, ஆனால் தன்னை இந்துவாக முன்னிலைப்படுத்தி வருகிறார் என அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.


Advertisement

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வழக்கத்தை விட மத சம்பந்தமான விமர்சனங்கள் பாஜக, காங்கிரஸ் இடையே அதிக அளவில் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சோம்நாத் கோவிலுக்குள் சென்ற போது இந்து அல்லாதோர் பதிவேட்டில் கையெழுத்திட்டதாக பாஜக விமர்சனம் செய்தது. இதனையடுத்து தான் ஒரு சிவ பக்தர் என்று ராகுல் கூறினார்.

        


Advertisement

இந்நிலையில், காங்கிரஸ், பாஜக மதத்தின் பெயரால் அரசியல் செய்வதாக அகில இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரதமர் மோடி தன்னை இந்து என்று அறிவித்துக் கொள்ளும் போது எல்லோருக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. ஆனால் நான் என்னை முஸ்லீம் என்று கூறும் போது சரியாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. பாஜக தலைவர் அமித்ஷா ஒரு இந்துவே அல்ல, ஆனால் தன்னை இந்துவாக முன்னிலைப்படுத்தி வருகிறார்” என்றார்.
 


Advertisement

Advertisement
[X] Close