ஒகி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், கடலில் தவிக்கும் மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஒகி புயல் பாதிப்பு மற்றும் மீனவர்கள் மாயமானது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, “பேரழிவை ஏற்படுத்தியுள்ள ஒகி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை காப்பாற்றிட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒகி புயலாக மாறி குமரி மாவட்டத்தையே புரட்டிப்போட்டுள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கெடுத்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. வாகனங்கள், மக்கள் வீடுகளில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்த கோர புயலுக்கு இதுவரை கன்னியாகுமரியில் மட்டும் 10 உயிரிழந்துள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தை சேர்ந்த 18 மீனவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். அத்துடன் கடலில் சிக்கிய கேரளாவை சேர்ந்த 250 மீனவர்களில் 79 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் புயலால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
HDFC வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.13 கோடி வரவு எப்படி?- வங்கி அதிகாரிகள் விளக்கம்
தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி