துபாயில் ராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு: உடலைக் கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை

துபாயில் ராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு: உடலைக் கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை
துபாயில் ராமேஸ்வரம் மீனவர் உயிரிழப்பு: உடலைக் கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை

துபாயில் மீன்பிடிக்கச் சென்றபோது உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவரின் உடலை கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துபாயில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர் நடுக்கடலில் இறந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட கடலோர மீனவக் கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த நம்பு குமார் என்ற மீனவர் ஒப்பந்த அடிப்படையில் துபாய்க்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். நான்கு நாட்களுக்கு முன்னர் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடல்சீற்றம் ஏற்பட்டு படகில் இருந்து தவறி கடலில் விழுந்து உயிரிழந்தார்.

சகமீனவர்கள் அவர் உடலை மீட்டனர். இந்த நிலையில் மீனவர் நம்பு குமாரின் உடலை துபாயில் இருந்து தாயகம் கொண்டு வர உதவ வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு மீனவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com